இந்தியாவில் மூடப்படுகிறது வால்மார்ட்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மூடப்படுகிறது வால்மார்ட்?

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (5)

புதுடில்லி : இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் மூடப்பட உள்ளதாகவும், அதன் ஒரு முயற்சியாகவே இந்தியாவில் உள்ள கிளைகளில் வால்மார்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் 28 கடைகள் இருக்கின்றன. இங்கிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நீட்டிக்கவும், சந்தைப் பங்கை உயர்த்தவும் அதிகளவில் முதலீடு செய்துவரும் வால்மார்ட், தொழில் சீரமைப்புப் பணியில் துரிதமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாக, ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் வால்மார்ட் நிறுவனத்தின் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரமைப்பு நடவடிக்கையில் தற்போது 50 செயலதிகாரிகளை வால்மார்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. வால்மார்ட் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவில் வளர்ச்சி போதுமான அளவில் இல்லாததால் அப்பரிவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையில் அதிகக் கவனம் செலுத்துவதால் நேரடி விற்பனைத் தொழிலில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்தான் என்று வால்மார்ட் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் 50 இந்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


புதிய கடைகளைத் திறக்கும் நடவடிக்கையிலும் வால்மார்ட் மும்முரமாக ஈடுபடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மாறாக ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவிகிதப் பங்குகளை வால்மார்ட் கைப்பற்றியது. 16 பில்லியன் டாலர் தொகைக்கு இப்பங்குகளை வால்மார்ட் கைப்பற்றிய நிலையில் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை வழங்கி வருகிறது வால்மார்ட்.

வால்மார்ட் நிறுவனத்துக்கு இந்தியாவில் மட்டும் 5,300 பணியாளர்கள் இருக்கின்றனர். இதில் சுமார் 600 பேர் வால்மார்ட் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X