உத்தவ் ராஜினாமா செய்வார்: 'மாஜி' காங்., எம்பி எச்சரிக்கை

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (9)
Advertisement
Maharashtra, UddhavThackeray, ShivSena, Resign, ExCongress, MP, YashwantraoGadakh, Congress, NCP, Warn, மஹாராஷ்டிரா, உத்தவ்தாக்கரே, சிவசேனா, ராஜினாமா, காங்கிரஸ், எம்பி, தேசியவாதகாங்கிரஸ், எச்சரிக்ை

இந்த செய்தியை கேட்க

மும்பை: காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சியினர் ஒழுங்காக நடந்துக்கொள்ளாவிட்டால் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வார் என முன்னாள் காங்., எம்.பி., யஸ்வந்திராவ் கடாக் எச்சரித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்., தேசியவாத காங்., கூட்டணியுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த மாதம் மஹா., அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், தேசியவாத காங்.,கின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வரானார். உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சரானார். மொத்தம், 36 பேர் அமைச்சராக பதவியேற்றனர். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததால், மூன்று கட்சிகளிலும் பலர் அதிருப்தி அடைந்தனர். இதனால், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.




இந்நிலையில், காங்., முன்னாள் எம்பி., யஸ்வந்திராவ் கடாக், காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சியை கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது: உத்தவ், வழக்கமான அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு கலைஞர் போன்ற மனநிலையில் இருக்கிறார். காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சியினர், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து குறை கூறுவதை நிறுத்த வேண்டும். இருகட்சிகளும் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை எனில் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஜன-202021:18:51 IST Report Abuse
Sampath Kumar அரசியலில் இது எல்லாம் சாதாரணம் அய்யா
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
14-ஜன-202011:01:20 IST Report Abuse
TamilArasan காங்கிரஸ் கட்சி தனது பாக்கட்டை நிரப்பும் வரை சிவசேனாவுடன் உறவாடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-ஜன-202008:19:00 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Power poltics, family politics will not survive. Udhav spoiled his name , the next election teach him.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X