நிலவுக்கு செல்ல காதலி தேவை: ஜப்பான் கோடீஸ்வரரின் ஆசை

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (6)
Advertisement
YusakuMaezawa, Japan, Billionaire, SpaceX, Moon, Girlfriend, Wanted, ஜப்பான், கோடீஸ்வரர், யுசகுமேசவா, நிலவு, பயணம், ஸ்பேஸ்எக்ஸ், காதலி, தேவை

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர், யுசகு மேசவா என்பவர், தன்னுடன் நிலவுக்கு பயணம் செய்ய ஒரு காதலி தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த பிரபல ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியான சோசோ (zozo) நிறுவனரும் கோடீஸ்வரருமான யுசகு மேசவா, எப்போதும் வித்தியாசமான அணுகுமுறையை சோதனை செய்து பார்ப்பதில் ஆர்வமுள்ளவர், பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் எனவும், தனிமனிதனின் வாழ்வில் பணத்தின் தாக்கம் என்ன எனவும், தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு சமீபத்தில் டுவிட்டரில் தனது பதிவை 'ரீ-டுவிட்' செய்பவர்களுக்கு 1 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.65.3 கோடி) பரிசாக அளிக்கப்போவதாகவும் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவை சுற்றி பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள யுசகு, தன்னுடன் நிலவுக்கு வர காதலித் தேவை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: 44 வயதுடைய நான், இதுவரையில் விரும்பியபடி தான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் தற்போது தனிமை மற்றும் வெறுமையின் உணர்வுகள் என் மீது படரத் தொடங்கியுள்ளது. நான் நினைப்பதெல்லாம், நான் நேசிக்க ஒரு பெண் தேவை.

நிலவுக்கு என்னுடன் வர ஒரு காதலி தேவை. அதற்கு 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களில் ஒருவரை மார்ச் இறுதிக்குள் தேர்வு செய்வேன். நிலவுக்கு பயணம் செய்யும் முதல் பெண்ணாக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
14-ஜன-202007:48:29 IST Report Abuse
oce பூமியில் மக்கள் கூட்டத்திடையில் தனிமையாக வாழ்வதாக விரக்தியடையும் நீ ஆளே இல்லாத நிலவில் உன் காதலியை வைத்து என்ன செய்வாய். மகனே.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
14-ஜன-202007:46:29 IST Report Abuse
oce ஏம்பா யுசகு நிலவுக்கு காரிலா போவாய். அல்லது ஏரோ பிளேனா.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
14-ஜன-202007:43:12 IST Report Abuse
oce யுசகு மேசவா.நீ காதலி என்ற பெயரில் ஒரு பெண்ணுடன் நிலவுக்கு போனால் நீ தான் முதல் ஜெனரேஷன் பிரம்மா. நல்ல பெண்ணா பார்த்து இட்டும் போ. அங்க போய் எசகு பிசகா எதையாவது பண்ணி மாட்டிக்காதே. சரியா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X