பாக்., மாஜி அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Musharraf,Pakistan,death_penalty,PervezMusharraf,
Lahore_HighCourt, பாகிஸ்தான், முஷாரப்,தூக்கு,ரத்து, லாகூர்,நீதிமன்றம்

இஸ்லாமாபாத் : தேச துரோக வழக்கில், பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

முஷாரப், 2001 - 2008 வரை, பாக்., அதிபராக இருந்தபோது, 2007ல், அவசர நிலையை அமல் படுத்தினார். இது தொடர்பாக, 2013ல், அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும், நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், பெஷாவர் சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பிற்கு, தூக்கு தண்டனை விதித்தது. மேலும், தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் தீர்ப்புரையில் கூறப்பட்டிருந்தது.





இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202013:50:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதுவன்றோ நாடு , தூக்கு தண்டனை கொடுத்த நீதிபதியை என்ன செய்தார்கள் என்று சொல்லவில்லையே.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
14-ஜன-202012:50:02 IST Report Abuse
சீனி எல்லா தீவிரவாதியும் ஜாலியா வெளிய தான் சுத்திகிட்டு இருக்கானுங்க. பக்கிகள் வேலையே இதுதான், பெருசா தண்டனை கொடுக்கிற மாதிரி இருக்கும், ஆனா சத்தமில்லாம் வெளிய விட்டுவிடுவாங்க. மார்க்கம் முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
14-ஜன-202008:22:38 IST Report Abuse
Allah Daniel என்ன இன்னும் காணும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X