புத்தக திருவிழாவில் அந்துமணி ...

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement



latest tamil news



சென்னையில் 43வது வருடமாக நடந்துவரும் புத்தக கண்காட்சியில் தினமலர் வாரமலர் அந்துமணி எழுதிய வாசகர்கள் கேள்விகளுக்கான பதில்கள் தொகுப்பு புத்தகம் அதிகம் விற்கும் புத்தகங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது.


latest tamil news


இந்த வருடம் வாசகர்களை கவரும் விதத்தில் எழுத்தாளர் முற்றம்,கீழடி,குறும்படம் என்று மூன்று புதிய விஷயங்களை


latest tamil news


Advertisement

ஏற்படுத்தியுள்ளனர்.தமிழர்களின் தொன்மை சான்றுகளை விளக்கும் கீழடி அரங்கில் கொடுக்கப்படும் ‛பைனாகுலர்' போன்ற கருவியை கண்களில் பொருதிப்பார்த்தால், முப்பரிமாணத்தில் கீழடியில் கிடைத்த பொருட்கள் ஆச்சரியமாக விரிகின்றன, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பார்த்து ரசிக்கின்றனர்.


latest tamil news



எழுத்தாளர் முற்றம் என்பது தேர்ந்து எடுத்த இருபத்தைந்து எழுத்தாளர்களைப் பற்றி பேசுகின்றனர் அந்தப்பக்கம் இன்னும் போகவில்லை போய்விட்டு அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.


latest tamil news


பெரும்பாலான கடைகளில் சாண்டியல்யனின் புத்தகங்களும்,கல்கியின் பொன்னியின் செல்வனும் தென்பட்டது.இன்றைக்கு அறுபதில் இருப்பவர்கள் இருபதில் விரும்பிப் படித்த ‛முத்து காமிக்ஸ்' புத்தகங்கள் புத்தும் புது மெருகுடன் விற்கிறது பழைய நினைப்புடன் தொட்டுப்பார்த்து மகிழ்கின்றனர்.


latest tamil news




வாசகர்களுக்கான வரவேற்பு வளைவுகளில் ஒன்றில் வாரமலர் அந்துமணி வரவேற்கிறார் அரங்கு எண் 205,206 ல் உள்ள தினமலர் அரங்கில் அவரது புதிய புத்தகமான அந்துமணி பதில்கள் புத்தகத்தை வாங்க ஆர்வமுடன் வரும் வாசகர்கள் புத்தகத்துடன் அவரது கையெழுத்தையும் பெற்றுச் செல்கின்றனர்.


latest tamil news



இதே ஸ்டாலில் நான் எழுதிய மூன்று புத்தகங்களும் கூட விற்பனையாகின்றன.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது தேசாந்திரி புத்தக அரங்கிற்கு வருபவர்களுக்கு அவரே கையெழுத்திட்டு புத்தகங்களை வழங்குகிறார்.சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் சூல் புத்தகம் சூடாக விற்பனையாகிறது பராதியார் கவிதைகள் உரையுடன் கனமான புத்தகமாக விற்கிறது இப்படி பல பல விஷயங்கள்.
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வருவது மகிழ்ச்சியான விஷயம்,புத்தகத்தின் மீதான நேசிப்பு குறையவில்லை என்பதையே புத்தகதிருவிழாவிற்கு வரும் கூட்டம் சொல்கிறது.
எல்.முருகராஜ்.murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202003:31:48 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை அந்துமணிகாகவே வாரமலர் விரும்பி படித்தேன்.. முப்பது ஆண்டுகள் முன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X