ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு பென்ஷன்: உத்தரகண்ட் திட்டம்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement

டேராடூன் : உத்தரகண்டில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதா மாதம் பென்ஷன் வழங்கும் திட்டத்தை பரிசீலனை செய்ய உத்திரகண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.


தற்போது ஆசிட் வீச்சால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக உத்தரகண்ட் அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த ஆலோசனை செய்து வருகிறது.

சபாக் என்னும் திரைப்படம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையை மையமாக கொண்டது. இந்த திரைப்படத்தின் எதிரொளியாகவும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா கூறுகையில், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 5000 முதல் 6000 வரை பென்ஷன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் அவர்கள் சமூகத்தில் மரியாதையுடனும் பண பிரச்னை இன்றியும் வாழ முடியும். இந்த திட்டத்திற்கு உத்தரகண்ட் அமைச்சரவை அனுமதி வழங்கியதும் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜன-202017:04:48 IST Report Abuse
Endrum Indian ஐயோ நாராயணா இந்த மாதிரி இலவசம் கொடுத்து கொடுத்து மக்களை சோம்பேறியாக்கதீர்கள். அவர்கள் வாழ ஒன்று வேலை கொடுங்கள், அதில் உழைத்து சாப்பிடட்டும், இல்லை ஒரு ஒரு குறுந்தொழில் வழிகாட்டி உதவிடுங்கள் அது தான் சாலச்சிறந்தது. இலவசம் தேவையே இல்லை இது எல்லோரையும் சோம்பேறி ஆக்கும் .
Rate this:
Share this comment
Cancel
priya -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-202020:24:56 IST Report Abuse
priya there should be no women who suffer from acid attack. punishment should be severe. that also needs to be taken care by government.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X