மாணவர்களிடம் பேச மோடி தயாரா? ராகுல் சவால்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (67)
Advertisement
Congress,Rahul,RahulGandhi,SoniaGandhi,Sonia,மோடி,சோனியா, காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி,PM,Modi,NarendraModi

புதுடில்லி: 'இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை குறித்து மாணவர்களிடம் பேச மோடி தயாரா?' என காங்., எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் இன்று (ஜன.,13) ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தி.மு.க., இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது. மம்தா, மாயாவதி, கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோரும் புறக்கணித்தனர்.


ஆட்சி நடத்த தெரியவில்லை:


ஆலோசனை கூட்டத்தில் காங்., இடைக்கால தலைவர் சோனியா பேசியதாவது: பா.ஜ., ஆதரவோடு டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். இக்கொடுமையை இந்தியாவே நேரடியாக கண்டது. மக்கள் மத்தியில் அரசு வெறுப்பை விதைத்துள்ளது.

மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ., செய்து வருகிறது. மோடியும், அமித்ஷாவும் தங்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்பதை நிரூபித்துள்ளனர். மாற்றி பேசி மக்களை அவர்கள் குழப்பி வருகின்றனர். தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கும் இந்திய பொருளாதாரம் குறித்து பதில் கூற தெரியாமல் இருவரும் குழப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.





கூட்டத்திற்கு பின் காங்., எம்.பி., ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு பதிலாக, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்தியாவை திசை திருப்பும் வேலையை மோடி செய்து வருகிறார். இளைஞர்களின் குரலை அரசு கேட்க வேண்டும். அதனை அடக்கி ஒடுக்கக்கூடாது.

இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் செல்வது குறித்து, மாணவர்களிடம் மோடி விளக்குவாரா? இளைஞர்களை சந்திக்கும் தைரியம் மோடிக்கு கிடையாது. போலீசார் உதவியின்றி, ஏதேனும் ஒரு பல்கலையில், இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டுக்கு அவர் என்ன செய்ய போகிறார் என்பதை பிரதமர் மோடி விளக்க தயாரா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜன-202017:10:19 IST Report Abuse
Endrum Indian படிக்க வந்த மாணவர்களிடம் பேசத்தயார் அரசியல் செய்ய வந்த மாணவர்களிடம் அல்லவே அல்ல, அதற்கு அவசியமும் இல்லை. குடியுரிமை சட்டம் ஒன்றும் ஜப்பானிய மொழியில் வரவில்லை ஆங்கிலத்தில் தான் உள்ளது அதை படித்து அதன் போருக்குள் கூட உணர முடியாதவர்கள் எல்லாம் மாணவர்களாக ஆகவே முடியாது ஒரு பப்பு தி க்ரெட்டாக மட்டுமே கேவலப்பட்டு முடியும் அவர்கள் வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஜன-202014:11:34 IST Report Abuse
Lion Drsekar இந்த சமோசாவுக்கு நாம் செவிசாய்க்கும் நேரத்தில் ஆக்கபூர்வ செயல்களில் ஈடுபடுவதே நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
14-ஜன-202014:08:18 IST Report Abuse
Anandan ஒருத்தராவது எங்க தலைவர் பேசுவார் என்று துணிச்சலாக சொல்றாங்களா பாருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X