பீஹாரில் என்.ஆர்.சி.,யை அமல்படுத்த மாட்டோம்: நிதிஷ்| Dinamalar

பீஹாரில் என்.ஆர்.சி.,யை அமல்படுத்த மாட்டோம்: நிதிஷ்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (20)
Share
பாட்னா : பீஹாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) அமல்படுத்தப்படாது என மாநில முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். பார்லி., மற்றும் சட்டசபையில் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான 126 அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான சிறப்பு கூட்டம் பீஹாரில் இன்று (ஜன.,13) நடந்தது. தொடர்ந்து நடந்த விவாதங்களுக்கு மத்தியில், குடியுரிமை திருத்த

பாட்னா : பீஹாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) அமல்படுத்தப்படாது என மாநில முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.



latest tamil news



பார்லி., மற்றும் சட்டசபையில் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான 126 அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான சிறப்பு கூட்டம் பீஹாரில் இன்று (ஜன.,13) நடந்தது. தொடர்ந்து நடந்த விவாதங்களுக்கு மத்தியில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த கேள்விகளுக்கு முதல்வர் நிதிஷ்குமார் பதிலளித்தார். அதில்,


latest tamil news



மக்கள் விரும்பினால் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். என்.ஆர்.சியை பொறுத்தவரை அதை நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. இங்கு என்.ஆர்.சி என்ற பேச்சிற்கே இடமில்லை. பீஹாரில் என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம். இது அசாம் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும். பிரதமரும் இதனை திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இவ்வாறு பேசினார்.


latest tamil news



குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேட்டிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ஐ.ஜ.த கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் இதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X