பொது செய்தி

இந்தியா

சில்லறை பணவீக்க விகிதம் 7.35 சதவீதமாக அதிகரிப்பு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி : விலைவாசி உயர்வால் இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தின் மதிப்பு 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.






இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சில்லறை பணவீக்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த நவ., மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்தது. மீண்டும் 2019 டிச., ல் பணவீக்கத்தின் மதிப்பு 7.35 சதவீதமாக அதிகரித்து. இது ரிசர்வ் வங்கி மதிப்பிட்ட அளவை விட அதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதற்கு நாட்டின் கடுமையான விலைவாசி உயர்வு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.





2019 ன் இறுதியில் பணவீக்கத்தின் மதிப்பு அதிகபட்சமாக 6 சதவீதம் வரை இருக்கலாம் என ஆர்.பி.ஐ திட்டமிட்டது. ஆனால் பணவீக்கத்தின் விகிதம் கடுமையாக அதிகரித்ததுள்ளது. மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி வகைகள், தானியங்கள் போன்ற அடிப்படை பொருட்களின் விலைவாசி உயர்வு தான் இதற்கு காரணம்.





இதனை தொடர்ந்து தான் சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்திலும் பணவீக்கத்தின் மதிப்பு அதிகரிக்கலாம். அதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஜன-202014:15:42 IST Report Abuse
Sampath Kumar ஆரூரர் அவர்கள் பொருளாதாரமேதை பணவீக்கம் அதிகரிப்புக்கு பலவகை காரணம் சொல்லப்பட்டாலும் அரசின் சில செயல் பாடுகள் , தவறான பொருளாதார கொள்கை GST உற்பத்தி குறைவு பணப்புழக்கம் குறைவு ஏன்று சொல்லிகொணெ போகலாம் அரசு சாதனை செய்து விட்டது ஏன்று யாரோ ஒருவர் சொல்வர் மக்கள் எல்லாம் எல்லாத்தையும் பொத்திகிட்டு போக வேண்டியது தான் இந்த லச்சணத்தில் இன்னும் இது மேலும் ஐந்து சதவிகிதம் உயரும் என்று கணிப்பு வேற
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜன-202012:21:27 IST Report Abuse
J.Isaac இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை கனம் ஆரூர் அவர்களே. அப்படித்தானே . வரி வசூல் பண்ணுவது ஓன்று தானே அரசின் வேலை .
Rate this:
Share this comment
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
14-ஜன-202011:45:36 IST Report Abuse
sambantham sasikumar GST. வந்தால் விலைவாசி எல்லாம் கட்டுக்குள் இருக்குமுன்னு முன்னாள் நிதிஅமைச்சர் சிதம்பரம் சொன்னார், இப்போ என்ன சொல்வாரோ தெரியல. பாவம் அவரும் கோர்ட், கேசு, வாய்தா, பயங்கர பிஸி,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X