சில்லறை பணவீக்க விகிதம் 7.35 சதவீதமாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சில்லறை பணவீக்க விகிதம் 7.35 சதவீதமாக அதிகரிப்பு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி : விலைவாசி உயர்வால் இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தின் மதிப்பு 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சில்லறை பணவீக்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த நவ., மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்தது. மீண்டும் 2019 டிச., ல் பணவீக்கத்தின் மதிப்பு 7.35 சதவீதமாக அதிகரித்து. இது ரிசர்வ் வங்கி மதிப்பிட்ட அளவை விட அதிகளாக

புதுடில்லி : விலைவாசி உயர்வால் இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தின் மதிப்பு 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சில்லறை பணவீக்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த நவ., மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்தது. மீண்டும் 2019 டிச., ல் பணவீக்கத்தின் மதிப்பு 7.35 சதவீதமாக அதிகரித்து. இது ரிசர்வ் வங்கி மதிப்பிட்ட அளவை விட அதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதற்கு நாட்டின் கடுமையான விலைவாசி உயர்வு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


latest tamil news



2019 ன் இறுதியில் பணவீக்கத்தின் மதிப்பு அதிகபட்சமாக 6 சதவீதம் வரை இருக்கலாம் என ஆர்.பி.ஐ திட்டமிட்டது. ஆனால் பணவீக்கத்தின் விகிதம் கடுமையாக அதிகரித்ததுள்ளது. மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி வகைகள், தானியங்கள் போன்ற அடிப்படை பொருட்களின் விலைவாசி உயர்வு தான் இதற்கு காரணம்.


latest tamil news



இதனை தொடர்ந்து தான் சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்திலும் பணவீக்கத்தின் மதிப்பு அதிகரிக்கலாம். அதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X