சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நல்ல காலம் பிறக்குமா?

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 நல்ல காலம் பிறக்குமா?

'அரசியல் எதிரிகள், எனக்கு சூனியம் வைத்து விட்டனர் போலிருக்கிறதே... நேரமே சரியில்லை' என, புலம்புகிறார், மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே. சிவசேனா நிறுவனரான, மறைந்த பால் தாக்கரேயின் உறவினர் இவர். தனக்குப் பின், சிவசேனா கட்சியை வழி நடத்த, ராஜ் தாக்கரேயை தயார் செய்து வந்தார், பால் தாக்கரே. திடீர் ஞானோதயம் ஏற்பட்டு, தன் மகன் உத்தவ் தாக்கரேயை முன்னிலைப்படுத்தினார்.

அதிருப்தி அடைந்த ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து வெளியேறி, புதிய கட்சியை துவக்கினார். இவரது கட்சி, மஹாராஷ்டிரா மக்களிடம் சரியாக போணியாகவில்லை. கடந்த, 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில், ராஜ் தாக்கரே கட்சி, ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றது. கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலிலும், இவரது கட்சி, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், சோகத்தில் மூழ்கியுள்ளார் ராஜ் தாக்கரே. 'நம் பேச்சை கேட்பதற்கு கூட்டம் கூடுகிறது. பிரசாரத்தில், மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், ஒட்டு மட்டும் விழ மாட்டேங்கிறதே... ஆளை காணாமலாக்கி விடுவர் போலிருக்கிறதே' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார் ராஜ்.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, கட்சி கொடியின் நிறத்தை மாற்ற, முடிவு செய்துள்ளார். 'இனியாவது நல்ல காலம் பிறக்குமா என பார்க்கலாம்' என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் ராஜ் தாக்கரே.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-ஜன-202005:59:03 IST Report Abuse
 nicolethomson தவறான முடிவு எடுக்கிறாரே என்னவென்று சொல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X