பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு வாரம்

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை கண்டுகொள்ளாமல், சுங்கச்சாவடி நிர்வாகங்கள், அலட்சியம் காட்டி வருவதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 5,000 கி.மீ.,க்கு மேல், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, 46 இடங்களில், சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இச்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்கு, சுங்கச் சாவடிகளுக்கு அருகில், தரமான குடிநீர், உணவகம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

சாலையில், விபத்து பகுதிகள் குறித்த விழிப்புணர்வு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஆங்காங்கே அவசர தொலைபேசி சேவையை ஏற்படுத்த வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தமிழக பிரிவு அதிகாரிகளும், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களும், இதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், 31வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம், 11 முதல், 17ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு கண் பார்வை பரிசோதனை, மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளிடம், விபத்து தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுங்கச்சாவடிகளை துாய்மையாக பராமரிக்கவும், தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இவற்றையும், ஆணைய தமிழக பிரிவு அதிகாரிகளும், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X