பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, திருச்சியில் ரூ.10க்கு சிறப்பு சுற்றுலா

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலா துறை சார்பில், மாட்டு பொங்கல் அன்று சென்னையிலும், காணும் பொங்கல் அன்று, திருச்சியிலும், 10 ரூபாய்க்கு சிறப்பு சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 10 ரூபாய்க்கு, சென்னை நகரை சுற்றிப் பார்க்கும் சிறப்பு சுற்றுலா திட்டம், புத்தாண்டு தினத்தன்று செயல்படுத்தப்பட்டது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து, பொங்கல் பண்டிகையிலும், சிறப்பு சுற்றுலா திட்டத்தை சுற்றுலா துறை அறிவித்துள்ளது. இந்த முறை, மாட்டு பொங்கலான, 16ம் தேதி சென்னையிலும், காணும் பொங்கலான, 17ம் தேதி, திருச்சி நகரிலும், 10 ரூபாய் கட்டணத்தில், சுற்றிப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், 16ம் தேதி, தீவுத்திடல் பொருட்காட்சி திடலில் இருந்து சுற்றுலா பஸ் புறப்படுகிறது. மெரினா, விவேகானந்தர் இல்லம், கடற்கரை, பெசன்ட்நகர், கிண்டி, குழந்தைகள் பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று வரலாம் திருச்சியில் தமிழ்நாடு விடுதியில் இருந்து, சுற்றுலா பஸ் புறப்படுகிறது. வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில், வண்ணத்து பூச்சி பூங்கா, திருவானைக் காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், அண்ணா கோளரங்கம் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம்.

இந்த சுற்றுலாவுக்கான பஸ்கள், காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை இயக்கப்பட உள்ளன. இதற்கு, 10 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணியர், எங்கு வேண்டுமானலும் ஏறலாம்; இறங்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X