அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் இழப்பை தடுக்க ரூ.1,200 கோடி; டில்லியில் தங்கமணி கோரிக்கை

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல பகுதிகளுக்கு எடுத்து செல்லும் போது, மின் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில், மின் இழப்பு அளவு, தற்போது, 14 சதவீதமாக உள்ளது. இதை, மேலும் குறைப்பதற்கு, டிரான்ஸ்பார்மர்களில், மின்சாரம் செல்லும் அளவை துல்லியமாக கண்டறிய வேண்டியுள்ளது. இதற்காக, மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில், மீட்டர்கள்

சென்னை : மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல பகுதிகளுக்கு எடுத்து செல்லும் போது, மின் இழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில், மின் இழப்பு அளவு, தற்போது, 14 சதவீதமாக உள்ளது. இதை, மேலும் குறைப்பதற்கு, டிரான்ஸ்பார்மர்களில், மின்சாரம் செல்லும் அளவை துல்லியமாக கண்டறிய வேண்டியுள்ளது. இதற்காக, மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில், மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன.மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை, டில்லியில், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரிய தலைவர் விக்ரம் கபூர் ஆகியோர், நேற்று சந்தித்தனர். அப்போது, மின் வினியோக, டிரான்ஸ்பார்மர்களில், நான்கு லட்சம் மீட்டர்கள் பொருத்த தேவைப்படும், 1,200 கோடி ரூபாய் நிதியை வழங்குமாறு, ஆர்.கே.சிங்கிடம், அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்தார்.

மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு, 6,000 மெகா வாட் மின்சாரம் வழங்க வேண்டும். வரும் கோடைக் காலத்தை சமாளிக்க, மத்திய தொகுப்பில் இருந்து, முழு மின்சாரம் வழங்குமாறும், அமைச்சர் தங்கமணி, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-202018:08:22 IST Report Abuse
தமிழவேல் வரிப்பணத்தை மத்தியில குடுத்துட்டு, இப்போ காசுக்கு தொங்க வேண்டி இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X