அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒற்றை சாளர முறை அனுமதி முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 ஒற்றை சாளர முறை அனுமதி  முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

சென்னை : தமிழகத்தில் தொழில் துவங்க, ஒற்றை சாளர முறையில் அனுமதி அளிப்பது குறித்து, உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

தமிழகத்தில், அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 2019ல், இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், 10.50 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய், முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. பிரிட்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு, முதல்வர் சுற்றுப்பயணம் சென்று, முதலீடுகளை ஈர்த்தார்.தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, ஒற்றை சாளர முறையில், தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்குவதற்காக, தமிழக அரசு சார்பில், உயர்மட்டக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

குழுவின் தலைவராக, முதல்வர் இ.பி.எஸ்., உள்ளார்.ஒற்றை சாளர முறை அனுமதிகளுக்கான, உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கருப்பணன், உதயகுமார், பெஞ்சமின், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் பல்வேறு துறை அரசு செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தொழில் துவங்க முன் வந்துள்ள நிறுவனங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய அனுமதிகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X