அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அந்தமானுடன் சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி'

Added : ஜன 13, 2020
Advertisement
  'அந்தமானுடன் சேர்த்து  40 தொகுதிகளில் வெற்றி'

சென்னை : 'லோக்சபா தேர்தலில், அந்தமானுடன் சேர்த்து, 40 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்சியினருக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்:அந்தமான் தி.மு.க., அலுவலகத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அந்தமான் மாநில செயலர், கே.ஜி.தாஸ், 'கருணாநிதியை, தமிழின தலைவராக குறிப்பிடுகிறீர்கள்; அது தவறு. அவர் இந்தியாவின் தலைவர்' என்றார். அது, தொண்டர்களுக்கு கிடைத்த பெருமை. அந்தமான் மாநில செயலர் குழந்தை, என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

'இனிமேல், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, லோக்சபா தேர்தலில், தேனி தவிர்த்து, தமிழகம், புதுச்சேரியில், 39 இடங்களில் வென்றது என சொல்லாதீர்கள்; அந்தமானையும் சேர்த்து, 40 இடங்களில், நமக்கு வெற்றி என, சொல்லுங்கள்' என்றார். அது, தி.மு.க.,விற்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புகார் மனுடில்லியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகியோரை, தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர்.பாலு, நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில், 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும், அதில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X