பொது செய்தி

தமிழ்நாடு

மழை, தேர்தல் எதிரொலி பீர் விற்பனை சரிவு

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : உள்ளாட்சி தேர்தலால், டாஸ்மாக் கடைகளில், டிசம்பரில் பீர் விற்பனை, 19 லட்சம் பெட்டிகளாக குறைந்துள்ளது.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும், 80 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை நடக்கிறது. மது கடைகளில், 2019 நவம்பரில், 21 லட்சம் பெட்டிகள் பீரும்; 47 லட்சம் பெட்டிகள் மது வகைகளும் விற்பனையாகின. டிசம்பர் இறுதியில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதனால், அம்மாவட்டங்களில், நான்கு நாட்கள், மதுக்கடைகள் மூடப்பட்டன. டிசம்பரில், சென்னை உட்பட, பல இடங்களில், மழையும் அதிகம் பெய்தது. இதையடுத்து, அம்மாதத்தில், பீர் விற்பனை, 19 லட்சம் பெட்டிகளாக குறைந்துள்ளது. இருப்பினும், மது வகைகள் விற்பனை, 48 லட்சம் பெட்டிகள் என்றளவில் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X