கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரம் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : வருமான வரித் துறை வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை, விசாரிக்க மறுத்த நீதிபதி, வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், கார்த்தி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. சென்னையை அடுத்த முட்டுக்காடு கிராமத்தில் உள்ள, நில விற்பனை வழியாக கிடைத்த வருமானத்தை, கணக்கில் காட்டவில்லை என, இவ்வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்தார்.

இம்மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. வேறு நீதிபதிக்கு, இந்த வழக்கை மாற்ற, நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரைத்தார்.இதற்கிடையில், வருமான வரித் துறை வழக்கை ரத்து செய்யக் கோரி, கார்த்தி மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அம்மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன், விசாரணைக்கு வந்தது.வருமான வரித்துறை சார்பில், 'சிறப்பு நீதிமன்றத்துக்கு, இவ்வழக்கு மாற்றப்பட்டதை, கார்த்தி குறிப்பிடவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆதிகேசவலு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தான், இந்த வழக்கை விசாரிக்க முடியும்' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இம்மனு, தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X