சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ; 4 பேருக்கு சாகும்வரை ஜெயில்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
 இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ; 4 பேருக்கு சாகும்வரை ஜெயில்

தஞ்சாவூர் : கும்பகோணத்தில், வட மாநில இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கு, சாகும் வரை சிறை தண்டனையும், தலா, 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த, 27 வயது இளம்பெண் ஒருவர், தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள வங்கியில் பணியமர்த்தப்பட்டார். பணியில் சேர்வதற்காக, 2018 டிச., 1ல், சென்னையில் இருந்து திருச்செந்துார் செல்லும் எக்ஸ்பிரசில், அந்தப் பெண், கும்பகோணம் வந்திறங்கினார்.இரவு, 11:00 மணியாகி விட்டதால், ஓட்டலில் அறை எடுத்து தங்குவதற்காக, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறியுள்ளார். இளம்பெண் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லாமல், ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி, 26, வேறு வழியாகச் சென்றுஉள்ளார்.சந்தேகமடைந்த அந்தப் பெண், தன் நண்பருக்கு போன் செய்து, ஆட்டோ டிரைவர் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்ணை, பாதி வழியில் இறக்கிவிட்டு சென்று விட்டார்.சாலையில் தனியாக நடந்து சென்ற அந்தப் பெண்ணை, அவ்வழியே டூ - வீலரில் வந்த, வசந்தகுமார், 24, தினேஷ்குமார், 25, ஆகியோர் கடத்திச் சென்று, நாச்சியார்கோவில், 'பைபாஸ்' சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து, தங்களது நண்பர்களான புருஷோத்தமன், 20, அன்பரசன், 20, ஆகியோரையும் வரவழைத்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர்;

மொபைல் போனில், 'வீடியோ'வும் எடுத்துள்ளனர்.'இதை வெளியே சொன்னால், வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம்' என, மிரட்டிய அவர்கள், அந்தப் பெண்ணை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, கும்பகோணம் மீன் மார்க்கெட் பகுதியில் தொடர்ச்சி 11ம் பக்கம்இளம்பெண் கூட்டு பாலியல்...முதல் பக்கத் தொடர்ச்சிவிட்டு சென்றனர். இது தொடர்பாக, மறுநாள், வங்கி நிர்வாகத்தினர், தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், குறித்து வைத்திருந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கும்பகோணம், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த வசந்தகுமார் உள்ளிட்ட நால்வர், இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, டிச., 5ல், நால்வரையும், ஆட்டோ டிரைவர் குருமூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக, 700 பக்க குற்றப் பத்திரிகையை, தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில், போலீசார் தாக்கல் செய்தனர். அரசு தரப்பு சாட்சியாக, 33 பேர் விசாரிக்கப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, நேற்று அளித்த தீர்ப்பு:இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டிய நான்கு பேரும், இயற்கை மரணம் ஏற்படும் வரை, சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். நால்வருக்கும், தலா, 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், தண்டனை பெற்றவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையில், 2 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.பாக்ஸ்...1உதவிய 18 தடயங்கள்வழக்கில், 68 சான்று ஆவணங்களும், 18 தடயங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. தினேஷ் மொபைல் போனில் பதிவு செய்த வீடியோவும், வழக்குக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும், பலாத்காரம் செய்தவர்களின், டி.என்.ஏ., பரிசோதனையும் வழக்குக்கு உதவியது. இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு-------சம்பவம் தொடர்பாக, கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். 'இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சம்பவம் நடந்த ஐந்து நாட்களில், திறமையாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளார். மேலும், வழக்கில் விரைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 14 மாதங்களில், குற்றவாளிகளுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்து, சிறப்பாக பணியாற்றியுள்ளார்' என, நீதிபதி எழிலரசி பாராட்டினார்.*

*கோரிக்கை நிராகரிப்புதீர்ப்பளித்த நீதிபதியிடம், 'தெரியாமல் தவறு செய்து விட்டோம்; தண்டனையை குறைக்க வேண்டும்' என, நால்வரும் கேட்டுள்ளனர். அதேபோல், 'வயதான தந்தையை பராமரிக்க வேண்டிஇருப்பதால், தண்டனையை குறைக்க வேண்டும்' என, ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி கேட்டுள்ளார். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.thiyagarajan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-202019:26:31 IST Report Abuse
r.thiyagarajan my opinion please hang 4 of them until die as soon....
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
20-ஜன-202013:32:10 IST Report Abuse
pattikkaattaan விரைவில் தண்டனை வாங்கிக்கொடுத்த காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி .. குற்றவாளிகள் எடுத்த வீடியோவே அவர்களுக்கு எதிரான முக்கிய ஆதாரமாக அமைந்துவிட்டது ..
Rate this:
Cancel
thangaraj - ERODE,இந்தியா
20-ஜன-202010:03:48 IST Report Abuse
thangaraj இந்த இன்ஸ்பெக்ட்டருக்கும் நீதிபதி அவர்களுக்கும் வணக்கங்கள். அப்பீல் செய்வார்கள் தண்டனை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X