சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர்களுக்கு பூக்கள் வழங்கி கன்னட அமைப்பினர் போராட்டம்

Added : ஜன 13, 2020
Advertisement

ஓசூர் : கர்நாடகா எல்லையில், போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட கூட்டமைப்பினர், தமிழக வாகன டிரைவர்களுக்கு பூக்கள் வழங்கி வழியனுப்பினர்.

கர்நாடகா மாநில அரசு பஸ் மீது, மேல்மருவத்துார் அருகே, சமீபத்தில் கல் வீசப்பட்டதாக, அந்த மாநிலத்தில் தகவல் பரவியது.இதேபோல், கர்நாடகா மாநிலத்தில் இருந்து, சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் வேனின் பின்புறம், பல அடி உயரத்திற்கு மிக நீளமாக கட்டப்பட்டிருந்த கர்நாடக மாநில கொடியை, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, கிருஷ்ணகிரி போலீசார் அகற்றினர்.இந்த சம்பவங்களை கண்டித்து, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகே, கன்னட கூட்டமைப்புகள் சார்பில், நேற்று போராட்டம் நடந்தது. தமிழக முதல்வர், இ.பி.எஸ்., படத்தை எடுத்து வந்த கன்னட அமைப்பினர், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மேலும், 'தமிழக - கன்னட மக்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும். பிரச்னை என வந்தால், அதற்கும் நாங்கள் தயார்' எனக் கூறி, உருட்டுக் கட்டைகள் மற்றும் பூக்களுடன் பஸ்களில் ஏறி, பயணியருக்கு ரோஜா பூக்கள் வழங்கினர்.தமிழக பதிவெண் லாரி டிரைவர்களை நிறுத்தி, பூக்கள் வழங்கி வழியனுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட, ஐந்து பெண்கள் உட்பட, 35 பேரை கர்நாடகா மாநில போலீசார் கைது செய்தனர். பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X