சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை முயற்சி பட்டதாரி கைது

Added : ஜன 13, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : அரசு வேலை வழங்கக் கோரி, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பட்டதாரியை, போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராய பாளையத்தைச் சேர்ந்தவர், குமாரவேல், 40; பி.ஏ., - பி.எட்., பட்டதாரி. இவர், 2014ல், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வாகியுள்ளார்.மேலும், 2017ல், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற நிலையிலும், தனக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை எனக் கூறி, நேற்று, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.அப்போது, திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து விசாரித்தனர்.பின், கலெக்டர் அலுவலகத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக, வழக்கு பதிவு செய்து, குமாரவேலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X