சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி சிறுத்தை பலி

Added : ஜன 13, 2020
Share
Advertisement

சத்தியமங்கலம் : திம்பம் மலைப் பாதையில் வாகனம் மோதி, 5 வயது ஆண் சிறுத்தை உயிரிழந்தது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப் பாதை உள்ளது.

இந்தப் பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது. வன விலங்குகள் அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் சாலையை கடந்து செல்வது வழக்கம்.நேற்று காலை, திம்பம் மலைப் பாதையின், 11வது கொண்டை ஊசி வளைவில், 5 வயதான ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. வனத்துறையினர், சிறுத்தை உடலை மீட்டு, வன கால்நடை மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில், வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்தது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X