சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்., தலைவர், கணவர் மீது தாக்குதல் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திருச்சி : மணல் பிரச்னையில் தலையிட்டதால், தாக்கப்பட்ட பஞ்., தலைவர் மற்றும் அவரது கணவர், பஞ்., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக, கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருச்சி, மணிகண்டம் யூனியனுக்கு உட்பட்ட, முடிகண்டம் பஞ்சாயத்தில் உள்ளது, ஓலையூர் கிராமம். இப்பகுதியில், ரிங் ரோடு பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த பணிக்காக, அரசின் அனுமதியோடு, லாரிகளில் மணல் எடுத்துள்ளனர்.அப்பகுதியைச் சேர்ந்த மூக்கன் என்ற, அ.தி.மு.க., பிரமுகர் தலைமையில் சிலர் சேர்ந்து, லாரி டிரைவர்களிடம் பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளனர். அங்கு வந்த, முடிகண்டம் பஞ்., தலைவர் ஜான்சி திவ்யா, அவரது கணவர் சின்னதம்பி ஆகியோர், 'அரசு பணிக்கு தானே மணல் செல்கிறது; ஏன் தடுக்கிறீர்கள்' எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு, மூக்கனும், அவருடன் வந்தவர்களும் கடுப்பாகி, திவ்யாவையும், அவரது கணவரையும் தாக்கியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள், முடிகண்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து, உள்ளே சென்று பூட்டி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிகண்டம் போலீசார் பேச்சு நடத்தியும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. நேற்று காலை, அவர்களுக்கு ஆதரவாக, கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்., தலைவர் ஜான்சி திவ்யாவின் கணவர் சின்னதம்பி கூறியதாவது:மூக்கனும், அவர் சார்ந்த சமுதாயத்தினரும், இந்த பகுதி மக்களை, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகின்றனர். தற்போது நாங்கள் ஜெயித்தது, அவர்களை தட்டிக் கேட்டது, அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால், அரசுக்கு ஆதரவாக பேசியும், அ.தி.மு.க., பிரமுகராக இருந்தும் எங்களை தாக்கினர். கலெக்டர் இப்பிரச்னையில் தலையிடாமல், போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X