பொது செய்தி

தமிழ்நாடு

கேமரா பொருத்திய பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு

Added : ஜன 13, 2020
Advertisement

பெரம்பலுார் : கூவத்துார் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றவர், 24 இடங்களில், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி, பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, 'குற்றங்களை தடுக்கும் வகையில், கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்இதையடுத்து, கூவத்துார் பஞ்சாயத்தில், புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டேவிட், பொதுமக்களின் பங்களிப்புடன், 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக கேமராக்கள் பொருத்திய பஞ்சாயத்து தலைவர் டேவிட்டை, பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X