பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்

Added : ஜன 13, 2020
Advertisement

திருச்சி : ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்தது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், டிச., 26ல், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது.

தொடர்ந்து, நடந்த பகல் பத்து உற்சவத்தின் போது, நம் பெருமாள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.கடந்த, 6ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அன்று முதல், ராப்பத்து உற்சவம் துவங்கியது. ராப்பத்து உற்சவத்தில் நேற்று, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்தது.மாலை, 5:15 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், 6:15 மணி வரை வையாளி கண்டருளினார். பின், திருமாமணி மண்டபம் சென்ற நம்பெருமாளுக்கு, உபயதாரர் சேவையும், பொது மக்கள் சேவையும் நடந்தது.***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X