சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுக்கு முன் மாயமான ஆசிரியை குடும்பத்துடன் வந்தார்

Added : ஜன 13, 2020
Advertisement

சேலம் : பத்து ஆண்டுகளுக்கு முன், 20 வயது வாலிபருடன் மாயமான, தனியார் பள்ளி ஆசிரியை, கணவர், இரண்டு குழந்தைகளுடன் ஊர் திரும்பினார். தன் பெற்றோரால் உயிருக்கு ஆபத்து உள்ளதால், பாதுகாப்பு கேட்டு, போலீசில் புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் செல்வமணி, 36; பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இவரது வீட்டின் அருகில் உள்ள ரமேஷ், 30, என்பவருடன் செல்வமணிக்கு பழக்கம் ஏற்பட்டு, இரண்டு முறை வெளியூர் சென்றவர்களை, உறவினர்கள் மீட்டு வந்தனர். 6 வயது குறைவான மற்றும் தம்பி முறை கொண்ட ரமேஷுடன் பழகுவதை, இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர்.மூன்றாவது முறையாக, 2010 ஜூன், 21ல், ரமேஷ், செல்வமணி மாயமாகினர்.

செல்வமணி தாயின் புகாரின்படி, பல இடங்களில் போலீசார் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், செல்வமணி, கணவர் ரமேஷ், 7 மற்றும் ஒன்றரை வயது மகன்களுடன் நேற்று நரசிங்கபுரம் வந்தார். இதையறிந்த செல்வமணியின் தாய் உள்ளிட்ட குடும்பத்தினர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, செல்வமணி, தனக்கும், கணவர், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கோரி, ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X