சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: குழந்தைகளுக்கு பயன்

Added : ஜன 13, 2020
Advertisement

அமெரிக்காவின் 'ஸ்மார்டி' நிறுவனம் 'டயாப்பரில்', தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சாரை, ஸ்மார்ட்போனுடன் இணைக்க வேண்டும். டயாப்பரில் உள்ள 'சென்சார்' குழந்தைகளின் உடலில் சிறுநீர், மலம் மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கும். குழந்தைகளுக்கு சிறுநீர் வரும் நேரத்தை கணக்கிடுகிறது. மேலும் டயாப்பரில் குழந்தைகள் சிறுநீர் இருந்தவுடன் பெற்றோரின் ஸ்மார்ட்போனுக்கு தெரிவிக்கிறது. இதனால் உடனே டயாப்பரை மாற்ற உதவுகிறது. முதியோரும் பயன்படுத்தலாம்.


தகவல் சுரங்கம்: அணுசக்தி கண்காணிப்பு

உலகில் அணுசக்தியை ஆக்கப்பூர்வமான விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச அணுசக்தி முகமை 1957 ஜூலை 29ல் தொடங்கப்பட்டது. இது ஐ.நா.,வின் துணை அமைப்பு. இது ஐ.நா., பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை வழங்குகிறது. இதில் 171 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தற்போதைய தலைவராக அர்ஜென்டினாவின் ரபாய் குரோசி பதவி வகிக்கிறார். இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா. தவிர ஜப்பானின் டோக்கியோ, கனடாவின் டொரண்டோவில் மண்டல அலுவலகங்கள் உள்ளன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X