சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

என் ஊரிலேயே என் காளைகளை பிடிக்க ஆளில்லை!

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 என் ஊரிலேயே என் காளைகளை பிடிக்க ஆளில்லை!

காளையர் மட்டுமே சாதிக்கும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில் அசத்தி வரும், திருநங்கை சிந்தாமணி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் பெற்ற, அலங்காநல்லுார் அருகில் உள்ள கல்லணை தான், என் சொந்த ஊர். ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளேன்.எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர், மாடுபிடி வீரர்களாகவும், ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்ப்பவர்களாகவும் இருப்பர்.

அதனால், எனக்கும் சிறு வயதிலேயே, காளை மாடுகள் மீது ஈர்ப்பு வந்து விட்டது. அந்த நேரம், 'ஹார்மோன்' கோளாறால், என் உடலில் மாற்றம் ஏற்படத் துவங்கியது; திருநங்கையாக மாறி விட்டேன்.வீட்டில் என்னை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை; விரட்டி விட்டனர். அதனால், கிடைத்த வேலைகளைப் பார்த்து, பசியை போக்கி வந்தேன். என் மீது இரக்கம் கொண்ட மாடுபிடி வீரர் ஒருவர் தான், மாடு வளர்த்து பிழைக்கலாம் என, அறிவுரை கூறினார்.

அதன்படி, சந்தையில் பசு மற்றும் கன்றை வாங்கி, அவற்றை வளர்த்து, பால் கறந்து, விற்று சம்பாதிக்கத் துவங்கினேன். அதில் கிடைத்த லாபத்தை வைத்து, கூடுதலாக சில மாடுகளை வாங்கி, வளர்க்கத் துவங்கினேன். அதன் பிறகு, சிறு வயது ஆசையான, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில், கவனம் செல்லத் துவங்கியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், அசலுார் சந்தையில், காளை ஒன்றை வாங்கி, பயிற்சி கொடுக்கத் துவங்கினேன்.

அதைப் பார்த்த எங்கள் கிராமத்தினர், 'உனக்கு எதுக்கு, இந்த வேண்டாத வேலை' என்று கூறி, என் தன்னம்பிக்கையை குலைக்கப் பார்த்தனர். அதை சட்டை செய்யாமல், காளைக்கு நன்கு பயிற்சி அளித்தேன்.இப்போது, ராமு, கருப்பு, லட்சுமணன் என, மூன்று ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறேன். அவற்றை, கடந்த சில ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறக்கி விட்டு வருகிறேன்.என் உடன் பிறந்த தம்பிகள் போல கருதும் இந்த காளைகளை, இதுவரை யாரும் பிடித்ததில்லை; அந்த அளவுக்கு அவை, சுற்றி நின்று விளையாடும். இந்த காளைகளால் எனக்கு, பெருமை கிடைக்கத் துவங்கியதை அடுத்து, என்னை புறக்கணித்த உறவினர்கள், என்னை தேடி வரத் துவங்கியுள்ளனர்.

யாரெல்லாம் என்னை விரட்டினரோ, அவர்கள் எல்லாம், தடபுடலாக வரவேற்பு கொடுக்கின்றனர். அதற்கு காரணம், இந்த காளைகள் தான். இவற்றை பிடிக்க, இந்த ஊரிலேயே ஆள் இல்லை.என்னைப் போலவே, எல்லா திருநங்கையரும், தங்களுக்குப் பிடித்த வேலையை மன நிறைவுடன், தைரியமாக செய்ய வேண்டும். அப்படி செய்தால், சமுதாயத்தில் பிறருக்கு கிடைக்கும் சம உரிமையும், மரியாதையும், அவர்களுக்கும் கிடைக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
14-ஜன-202010:08:40 IST Report Abuse
Siva அருமை .வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X