பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வந்தது ஜப்பானின், 'எசிகோ' கப்பல்

Added : ஜன 13, 2020
Advertisement
 சென்னை வந்தது ஜப்பானின், 'எசிகோ' கப்பல்

சென்னை : ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், நேற்று, சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இரு நாட்டு வீரர்களின் கூட்டு பயிற்சியும் துவங்கியுள்ளது.

இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே, 2006ல், கையெழுத்தான ஒப்பந்தப்படி, இரு நாட்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள், ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தாண்டு, 19வது முறையாக, கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான, எசிகோ என்ற ரோந்து கப்பல், கேப்டன் கியோஷி ஹரடா தலைமையில், 60 வீரர்களுடன், நேற்று சென்னை துறைமுகம் வந்தது. ஐந்து நாள் பயணமாக வந்துள்ள கப்பலை, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள், இருநாட்டு கொடிகளை அசைத்தபடி வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில், ஜப்பான் கடலோர காவல்படை கப்பல் கேப்டன், கியோஷி ஹரடா பேசியதாவது:ஜப்பானிலிருந்து, டிசம்பர், 26ல் புறப்பட்ட நாங்கள், தற்போது, சென்னை துறைமுகம் வந்துள்ளோம். இந்திய கடலோர காவல்படை சிறந்த வரவேற்பு அளித்துள்ளது.இரு நாட்டு வீரர்களும் கூட்டு பயிற்சியை துவக்கி உள்ளனர். இந்த பயிற்சி, 17ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டு பயிற்சி, இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்க்கும். இரு நாட்டு கடலோர காவல்படையின் திறன்களை மேலும் தெரிந்து கொள்ள, இந்த கூட்டு பயிற்சி சிறந்த வாய்ப்பாக இருக்கும்.மேலும், கடல் கொள்ளையை தடுப்பது, தேடுதல் மற்றும் மீட்பு தொடர்பான ஒத்திகைகளும், நடைபெற உள்ளன.

கடல் எல்லை சட்டங்களை அமல்படுத்துவது குறித்தும், விவாதிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், ஜப்பான் துணை துாதர் கொஜிரோ உச்சிமாயா, இணை துாதர் கொஜிரோ மோரி உட்பட, பலர் பங்கேற்றனர்.உற்சாகம் குறைவு ஏன்? சென்னை துறைமுகத்திற்கு வந்த, ஜப்பான் கடலோர காவல்படை கப்பல், எசிகோவிற்கு உற்சாகமான வரவேற்பு அளிப்பதில், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை கப்பல் வந்து நிற்க ஒதுக்கப்பட்டிருந்த தளத்தில், எண்ணெய் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த கப்பலை உள்ளே அனுப்பி விட்டு, ஜப்பான் கப்பலை உள்ளே வர வைக்க, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலானது. இதனால், குறித்த நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை; இந்திய கடலோர காவல்படையின், கிழக்கு பிராந்திய உயர் அதிகரிகள் வரவேற்பில் பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X