அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் செலவுகணக்கிடும் பணி

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : உள்ளாட்சி தேர்தல் செலவுகளை கணக்கிடும் பணிகள், 27 மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய, 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், தேர்தல் நடக்கவில்லை. தேர்தலை நடத்துவதற்கு பட்ஜெட்டில், 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டுமே, தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் செலவிற்கு, அரசு ஒதுக்கிய நிதியில், தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், தேர்தல் பார்வையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.ஓட்டுச் சீட்டுகள் அச்சடிப்பு, அழியாத மை, வீடியோ கண்காணிப்பு, வாகன வாடகை உள்ளிட்ட பல்வேறு பணிகள் என, மொத்தம், 90 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு உள்ளது. இந்த செலவுகளை கணக்கிட்டு, பட்டியல் தயாரிப்பு பணி, 27 மாவட்டங்களில் நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பின், செலவு கணக்குகள், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலர் மற்றும் இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X