அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டம் தொடர ஸ்டாலினிடம் வலியுறுத்தல்

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : 'தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை தொடர வேண்டும்' என, முஸ்லிம் அமைப்பு தலைவர்கள், தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை, அறிவாலயத்தில் ஸ்டாலினை, தமிழ்நாடு முஸ்லிம் இயக்க கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து பேசினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, தி.மு.க., தலைமையில் நடைபெற்ற போராட்டங்களுக்கு, முஸ்லிம் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். பின், நிருபர்களிடம், முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் கூறியதாவது:தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அதன் மற்றொரு வடிவமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளனர். இந்த திட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தின் துவக்கமாக உள்ளது. இதனால், பல இந்தியர்கள், சந்தேகத்திற்குரிய குடிமகனாக மாற்றப்படுவர். எனவே, இதை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என, ஸ்டாலினிடம், நாங்கள் வலியுறுத்தினோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், ஹிந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய, பார்லிமென்ட் ஆட்சிமொழிக்குழு, பொங்கல் திருநாள் கொண்டாடப்படும், 14, 15, 16ம் தேதிகளில் வருவது, கடும் கண்டனத்திற்குரியது. பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும், இந்த ஆய்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்கள், நிம்மதியாக பொங்கல் திருநாளை கொண்டாட வழி விட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஜன-202019:47:40 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தேசத்துரோக கிரிமினல்கள் மற்றோரு கிரிமினலிடம் முறையிடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
14-ஜன-202008:48:49 IST Report Abuse
Darmavan வன்முறை வெறியாட்டம் இதுவே பழகிப்போனவர்கள்.நாட்டு நிம்மதி கெடுகிறது.தினம் போராட்டத்தினால்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X