ஜே.என்.யூ., வன்முறை வழக்கு, 'வாட்ஸ் ஆப்' பிற்கு, 'நோட்டீஸ்'

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜே.என்.யூ., வன்முறை,நோட்டீஸ், வாட்ஸ்_ஆப்

புதுடில்லி: ஜே.என்.யூ., எனப்படும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த வன்முறையின் போது பகிரப்பட்ட சமூக வலைதள பதிவுகளை பாதுகாக்கக் கோரிய வழக்கில், வாட்ஸ் ஆப், கூகுள் நிறுவனங்கள் மற்றும் டில்லி போலீசாருக்கு, உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள், விடுதிக் கட்டணம் உயர்வுக்கு எதிராக, கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், இம்மாதம், 5ல், பல்கலை வளாகத்துக்குள் புகுந்த, முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள், மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


கண்காணிப்பு கேமரா:

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஜே.என்.யூ.,வில் பணியாற்றும் மூன்று பேராசிரியர்கள், இது தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். போராட்டத்தின் போது, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவிடும்படி, இந்த மனுவில், அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு, நீதிபதி பிரிஜேஸ் சேதி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, டில்லி போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய வீடியோக்களை தரும்படி, பல்கலை நிர்வாகத்துக்கு கூறப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதள நிறுவனங்களுக்கும் இது குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, கூகுள், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் டில்லி போலீசார், இது குறித்து பதில் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


அடையாளம் தெரிந்தது:

இதற்கிடையே, வன்முறை நடந்த ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், டில்லி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். ஜே.என்.யூ., மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷ் மற்றும் பங்கஜ் மிஷ்ரா, வாஸ்கர் விஜய் உள்ளிட்ட மாணவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், வன்முறையின் போது, முகமூடி அணிந்திருந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் பெயர் கோமல் சர்மா என்பதும், தவுலத் ராம் கல்லுாரி மாணவி என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு டில்லி போலீசார், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர்களுக்கு, பல்கலை நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மாணவர்களுக்கு, மீண்டும் வகுப்புகளை நடத்தும்படி தெரிவிக்கபப்பட்டுள்ளது. ஆனால், வகுப்புகளை நடத்துவதற்கான சூழல் இல்லை என, பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Jayakumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-202018:59:27 IST Report Abuse
Nagarajan Jayakumar மத்திய உளவுத்துறை இவர்களை கண்காணிக்க வேண்டும். இது போல் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜன-202016:37:36 IST Report Abuse
Endrum Indian இந்த கூமூட்டை ஒரு போட்டோவில் இடது கையில் இன்னொரு போட்டோவில் வலது கையில் கட்டு இன்னொரு முஸ்லீம் பெண் புர்கா சேர்ந்து தலையில் கட்டு. இன்னொருவனுக்கு முழுக்கை சட்டையுடன் கட்டு இது மாதிரி வாட்ஸ் அப்பில் நார் நாராக களைந்து விட்டார்கள் இந்த தண்டங்களை. மாணவன்/மாணவி போவது படிக்க செய்வது அரசியல். எங்கே அறிவு வளரும். ரூ 10 ஒரு மாதம் ஹாஸ்டல் ரூம் வாடகை இப்போது ரூ 300, 50 வருடம் கழித்து செய்ததால் ஸ்ட்ரைக் பந்த் போராட்டம்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-ஜன-202007:05:11 IST Report Abuse
blocked user கோமல் சர்மா மட்டுமல்ல, பல வெளியாட்கள் உள்ளே சென்று மாணவர்களை திசை திரும்புவதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக திமுகவின் குப்பைகள் அங்கு என்று விளம்பரம் தேட முயல்கிறார்கள். அவர்களையும் மாணவர்களை தூண்டியதற்கு வழக்கில் சேர்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X