சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை மணந்தவருக்கு சிறை

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : சிறுமியை திருமணம் செய்தவருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் சலீம், 29. இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை காதலித்துள்ளார்.

கடந்த, 2017 செப்டம்பர், 10ல், சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமியின் தாய், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 'போக்சோ' எனப்படும், குழந்தைகளுக்கு எதிரான பாலியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சலீமை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஆர்.என்.மஞ்சுளா முன் நடந்து வந்தது.போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீலேகா வாதாடினார். விசாரணைக்கு பின் நீதிபதிபிறப்பித்த உத்தரவு:சலீம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 6,000 ரூபாய் அபாரதமும் விதிக்கப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, ஆறு லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X