திலீப் கோஷ் சர்ச்சை பொறுப்பேற்க மறுப்பு

Added : ஜன 13, 2020
Share
Advertisement
கோல்கட்டா : ''மேற்கு வங்க பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துக்கும், பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, மத்திய சுற்றுச்சூழல் இணைஅமைச்சர் பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கே, சமீபத்தில், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு

கோல்கட்டா : ''மேற்கு வங்க பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துக்கும், பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, மத்திய சுற்றுச்சூழல் இணைஅமைச்சர் பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கே, சமீபத்தில், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது, வன்முறை கும்பல், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியது. இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:ரயில்வே சொத்துக்கள், வரி செலுத்தும் மக்களுடையது. அவை, வன்முறையாளர்களின் தகப்பனார்கள் சம்பாதித்த சொத்துக்கள் அல்ல. ரயில்வே சொத்துக்களை சூறையாடிய கும்பல் மீது, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தடியடி அல்லது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஓட்டுக்காக, அவர் அவ்வாறு செய்யவில்லை. இதே சேதம், பா.ஜ., ஆளும் உத்தரபிரதேசம், அசாம், கர்நாடகா மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தால், நாயை சுடுவது போல சுட்டிருப்பார்கள்.இவ்வாறு, அவர் கூறினார். இதற்கு, பபுல் சுப்ரியோ, 'டுவிட்டரில்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:திலீப் கோஷ் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். அது அவர் கருத்து. அதற்கு, பா.ஜ., எந்தவகையிலும் பொறுப்பேற்காது. பா.ஜ., ஆளும், உ.பி., அசாம் மாநிலங்களில், எந்த காரணத்திற்காகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. நடத்தப்பட மாட்டாது. அவ்வாறு நடக்கும் என்பது, திலீப் கோஷின் கற்பனை தவிர, வேறில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X