8 இடங்களில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி| Dinamalar

8 இடங்களில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

Added : ஜன 13, 2020

பால்டிமோர் : அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில், அடுத்தடுத்து நடந்த, எட்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில், கடந்த, 11ம் தேதி முதல், தொடர்ந்து எட்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடந்தன. கடந்த, 11ம் தேதி பிற்பகல், 2:30 மணியளவில், வடகிழக்கு பால்டிமோரில், மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், மூன்று பெண்கள் காயம் அடைந்தனர். அதில், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.அதேநாளில், மத்திய, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பால்டிமோர் பகுதிகளில், அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இரவு, 11:00 மணி வரை, எட்டு இடங்களில் நடத்தப்பட்ட அந்த தாக்குதல்களில், மொத்தம் ஐந்து பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்; ஏழு பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X