அருண் ஜெட்லியின் புத்தகம் பிப்ரவரியில் வெளியீடு

Added : ஜன 13, 2020
Advertisement

புதுடில்லி : மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, முதல் ஆட்சிக்காலத்தில், பா.ஜ., அரசு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து எழுதிய புத்தகம், வரும், பிப்ரவரியில் வெளியிடப்படவுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான, 2014 - -2019 ஆட்சிக்காலத்தில், ராணுவம், நிதி என முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த, அருண் ஜெட்லி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அருண் ஜெட்லி எழுதிய சில கட்டுரைகளை தொகுப்பாக்கி, புத்தகமாக வெளியிட, 'ஜகர்னாட் புக்ஸ்' பதிப்பகம் முடிவு செய்துள்ளது. 'ஏ நியூ இந்தியா: செலக்டட் ரைட்டிங்க்ஸ், 2014- - 19' என்ற தலைப்பில்உருவாக்கப்பட்டுள்ள அந்த புத்தகம், வரும் பிப்ரவரி மாதம், வெளியிடப்படவுள்ளது.

பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின், முதல் ஆட்சிக்காலத்தில், பிரதமர் மோடி எடுத்த முடிவுகளையும், அவர் பின்பற்றிய கொள்கைகள் குறித்தும், அந்த புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட, பா.ஜ., அரசின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வாரிசு அரசியலுக்கு முடிவு, பிராந்திய கட்சிகளுக்கு இடையிலான பிளவு, காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி ஆகியவை குறித்து, அருண் ஜெட்லி வெளிப்படுத்திய எண்ணங்களும், அந்த புத்தகத்தில் இடம்பெறவுள்ளன.

இதுகுறித்து, ஜகர்னாட் புக்ஸ் பதிப்பாளரும் நிறுவனருமான, சிக்கி சர்கார் கூறியதாவது: கடந்த, 2014 - 19ம் ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த பா.ஜ., அரசில், செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக இருந்தவர், அருண் ஜெட்லி. தற்போதைய, பா.ஜ.,வின் சகாப்தம் மற்றும் அதன் கொள்கைகள் குறித்த, அருண் ஜெட்லியின் தெளிவான கருத்துகளை, இந்த புத்தகம் உள்ளடக்கி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X