முஷாரப் மரண தண்டனை

Added : ஜன 13, 2020
Advertisement

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு, சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை, லாகூர் உயர் நீதிமன்றம், ரத்து செய்தது.

பாகிஸ்தான் அதிபராக, 1999 - 2008ம் ஆண்டுவரை இருந்தவர் முஷாரப், 76. கடந்த, 2007ல், பாகிஸ்தானில் அவசர நிலையை முஷாரப் அமல் படுத்தினார். இது தொடர்பாக, 2013ல் அவர் மீது, அப்போதிருந்த, நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, தேச துரோக வழக்கு பதிவு செய்தது.இதையடுத்து, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகருக்கு சென்ற முஷாரப், 2016ல் இருந்து, அங்கேயே வசித்து வருகிறார்.

தற்போது, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முஷாரப் மீதான, தேச துரோக வழக்கு விசாரணை, பெஷாவரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முஷாரபுக்கு கடந்த மாதம், 17ல் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில், முஷாரப் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவில், 'பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

இந்த தீர்ப்பை நிறைவேற்ற, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.முஷாரபின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சையத் மசாஹர் அலி அக்பர் நக்வி, முகமது அமீர் பட்டி, சவுத்ரி மசூத் ஜஹாங்கீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.இந்நிலையில், நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:முஷாரப் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கு, சட்டத்துக்குட்பட்டு இல்லை. அதனால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X