அவசியமில்லை!

Added : ஜன 13, 2020
Advertisement
 அவசியமில்லை!

என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, அசாம் மாநிலத்துக்காக கொண்டு வரப்பட்டது. அதை, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை; அதை நியாயப்படுத்த வேண்டியதில்லை. 'என்.ஆர்.சி., தற்போதைக்கு அமல்படுத்தப்படாது' என, பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
நிதிஷ் குமார் , பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்

சகிக்க மாட்டோம்!
ராணுவ நடவடிக்கைகள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளால் உயிரிழந்ததைவிட, நம் நாட்டில் விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காத, பொய் தகவல்களை அளிக்கும், சரியாக வேலை செய்யாத அதிகாரிகளை இனி சகித்துக் கொள்ள மாட்டோம்; அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவர்.
நிதின் கட்கரி , மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,
விவாதத்துக்கு தயாரா!
சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என, பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுடன் இணைந்து, சி.ஏ.ஏ., மூலம், சிலருடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று நாங்கள் கூறுகிறோம். இந்த பிரச்னையில், ஐந்து விமர்சகர்களை மோடி தேர்ந்தெடுக்கட்டும். 'டிவி'யில், அவர்களுடன் விவாதத்தில் பங்கேற்று, கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும்.
சிதம்பரம் , முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X