'நிர்பயா' குற்றவாளிகளை துாக்கிலிட

Added : ஜன 13, 2020
Share
Advertisement
புதுடில்லி : மருத்துவ மாணவி, 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரை துாக்கிலிடுவது குறித்த ஒத்திகை, திகார் சிறையில் நேற்று நடந்தது. டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012 டிசம்பரில், ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார். பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில்

புதுடில்லி : மருத்துவ மாணவி, 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரை துாக்கிலிடுவது குறித்த ஒத்திகை, திகார் சிறையில் நேற்று நடந்தது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012 டிசம்பரில், ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார். பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன், 'மைனர்' என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். ராம்சிங் என்ற குற்றவாளி, திகார் சிறையில் தற்கொலை செய்தார்.

முகேஷ், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார் சிங், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து வரும், 22ம் தேதி அதிகாலை, 7:00 மணிக்கு, டில்லி திகார் சிறையில், சிறை எண், 3ல், இவர்களுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான, 'வாரன்ட்' இவர்களுக்கு தரப்பட்டுள்ளது. திகார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் இல்லாததால், உத்தர பிரதேச மாநிலம், மீரட் சிறையிலிருந்து, பவன் ஜலாத் என்ற ஊழியர், திகார் சிறைக்கு வரவுள்ளார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் திகார் சிறையில், நான்கு பேரையும் துாக்கிலிடுவது குறித்த ஒத்திகையை சிறை அதிகாரிகள் நடத்தினர். முன்னதாக, குற்றவாளிகள் நான்கு பேரின் எடை கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ற கற்கள் அடுக்கப்பட்டு, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. இது குறித்து, சிறை வட்டாரங்கள் கூறியதாவது:துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்போது, எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்க, ஒத்திகை நடத்தப்பட்டது; எல்லாம் சரியாக நடந்தது.

தண்டனை நிறைவேற்றப்படும்போது, குற்றவாளிகளின் மனநிலை மற்றும் உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, நான்கு பேரிடமும், சிறை அதிகாரிகள், தொடர்ந்து இயல்பாக பேசி வருகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, துாக்கு தண்டனையை எதிர்த்து, வினய் குமார், முகேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X