இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 13, 2020
Share
ஜனவரி, 14, 1951தமிழக துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில், ஓட்டக்காரத் தேவர் -- பழனியம்மாள் தம்பதியின் மகனாக, 1951ல் பிறந்தார். உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு படித்தார். அ.தி.மு.க., கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக, 1996ல் பதவி வகித்தார். பின், 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று,
 இதே நாளில் அன்று


ஜனவரி, 14, 1951

தமிழக துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில், ஓட்டக்காரத் தேவர் -- பழனியம்மாள் தம்பதியின் மகனாக, 1951ல் பிறந்தார். உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு படித்தார். அ.தி.மு.க., கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக, 1996ல் பதவி வகித்தார். பின், 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, வருவாய் துறை அமைச்சரானார்.

'டான்சி' வழக்கில், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, 2001ல் முதல் முறையாக, ஓ.பி.எஸ்., முதல்வரானார். பின், 2014ல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்போது, ஓ.பி.எஸ்., இரண்டாவது முறையாக முதல்வரானார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016, டிசம்பர், 5ல் இறந்தார். இதனால், மூன்றாவது முறையாக, டிசம்பர், 6ல், ஓ.பி.எஸ்., தமிழக முதல்வரானார். தற்போது, தமிழகத்தின் துணை முதல்வராக உள்ளார்.

அவர் பிறந்த தினம் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X