பிரதமர் மோடியுடன் பிரான்சின் அதிபர் தொலைபேசியில் பேசினார்

Added : ஜன 13, 2020
Advertisement

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியை, ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான்தொலைபேசியில் அழைத்து, பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வருவதாக, மேக்ரான் கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் உள்ள நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில், 15 நாடுகளின் துாதர்கள் சமீபத்தில் அங்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர்நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார்.இம்மாதம், 10ம் தேதி இந்த பேச்சு நடந்துள்ளது.

இது குறித்து, பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து, இரு தலைவர்களும் விவாதித்தனர்.குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரில் உள்ள நிலவரம்குறித்து விவாதித்தனர். இந்தப் பிரச்னை குறித்து, பிரான்ஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறது.இதைத் தவிர, மேற்கு ஆசிய நாடுகள் பகுதியில் உள்ள பிரச்னை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

அங்கு பதற்றத்தை குறைக்கும் வகையில், சம்பந்தபட்ட நாடுகளை தொடர்ந்து வலியுறுத்துவது என்றும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில், இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்த துறைகளில், தொடர்ந்து இணைந்து செயல்பட, இரு தலைவர்களும் உறுதி எடுத்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X