கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'வக்ப் போர்டு' நிர்வாகத்தை அரசு ஏற்றதை எதிர்த்து வழக்கு

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : தமிழ்நாடு வக்ப் வாரிய நிர்வாகத்தை, அரசு ஏற்றதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த பலுார் ரகுமான் தாக்கல் செய்த மனு:வக்ப் வாரியத்துக்கு, ௧௧ உறுப்பினர்கள் இருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்களுக்கு, ௨௦௧௯ செப்டம்பரில், சிறுபான்மை நலத்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது. 'வக்ப் வாரிய நிர்வாகத்தை, அரசு ஏன் ஏற்கக்கூடாது' என, அதில் கூறப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விட, நியமன உறுப்பினர்கள் அதிகம் இருப்பதாக காரணம் கூறப்பட்டது.

இதையடுத்து, வக்ப் வாரியத்தை, அரசு ஏற்பதாக சிறுபான்மை நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தை பரிசீலிக்காமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.பி.நாராயணகுமார் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௨௮க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X