பொது செய்தி

தமிழ்நாடு

செல்லாத நோட்டுகளுடன் பரிதாப மூதாட்டி

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வேலுார்: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும்படி, 12 ஆயிரம் ரூபாயுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டியால், பரபரப்பு ஏற்பட்டது.வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு, வேலுார், சலவன்பேட்டை சூளைமேட்டைச் சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரி, 65, வந்தார்.
demonetization,Government,India,old500

வேலுார்: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும்படி, 12 ஆயிரம் ரூபாயுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டியால், பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு, வேலுார், சலவன்பேட்டை சூளைமேட்டைச் சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரி, 65, வந்தார். அவர், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 500 - 1,000 நோட்டுகள், 12 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். அதனுடன், தான் கொண்டு வந்த மனுவை, டி.ஆர்.ஓ., பார்த்திபனிடம் வழங்கினார்.

மனுவில் கூறியுள்ளதாவது: கணவரை இழந்து, யார் ஆதரவுமின்றி, குடிசையில் வசிக்கிறேன். கூலி வேலை செய்து, அதில் சேர்த்த, 12 ஆயிரம் ரூபாயை, பானையில் போட்டு வைத்திருந்தேன். மருத்துவ செலவுக்கு அந்த பணத்தை கொடுத்த போது வாங்க மறுத்தனர். அப்போது தான், இந்த பணம் செல்லாது என்பது தெரிந்தது. இந்த பணத்தை மாற்றித் தர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், 'இனி இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது' எனக் கூறினர். இதைக் கேட்டு, மூதாட்டி கண்ணீர் விட்டார். அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
14-ஜன-202017:59:42 IST Report Abuse
Balasubramanian Selvamani Ramasamy: I appreciate your intentions. One has to have direct contact with that poor old lady to help her. If you do through some media or agency..many bogus person..will mushroom. That's the bane of our society I sincerely believe some local chari person must have come to her rescue
Rate this:
Cancel
Selvamani Ramasamy - Newark, California,யூ.எஸ்.ஏ
14-ஜன-202005:14:56 IST Report Abuse
Selvamani Ramasamy Is there any contact detail for this person? I would like to help her.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-202020:03:30 IST Report Abuse
தமிழவேல் வேலூர் டி.ஆர்.ஓ., பார்த்திபனிடம் விசாரிக்கலாம்....
Rate this:
Cancel
14-ஜன-202000:12:42 IST Report Abuse
ஆப்பு இது மாதிரி புதுசா கிளம்பியிருக்காங்க. பாட்டி ஆயுசு முடியறதுக்குள்ள அந்த 25 லட்சம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X