சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் ஊழியர்களை தாக்கிய தெலுங்கானா தம்பதி கைது

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (5)
Advertisement
 கோவில் ஊழியர்களை தாக்கிய தெலுங்கானா தம்பதி கைது

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலில், போட்டோ எடுத்ததை தட்டிக் கேட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தாக்கிய, தெலுங்கானாவைச் சேர்ந்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ல் நடக்கிறது.

இதற்காக, கோவில் வளாகத்தில் உள்ள ராஜ மண்டபத்தில், தனி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.நேற்று காலை, உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் திருப்பணிக்குழு அதிகாரி நாடிமுத்து, காவலாளிகள் ராஜ்குமார், விஜய் ஆகியோர் பணியில் இருந்தனர்.அப்போது, கோவிலுக்கு சுற்றுலா வந்த, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் திருமலகிரியைச் சேர்ந்த சுந்தர் சர்மா, 65, அவரது மனைவி மஞ்சு, 64, ஆகியோர், தனி அலுவலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த ஓவியங்களை போட்டோ எடுக்க முயன்றனர்.

காவலாளி ராஜ்குமார், அதிகாரி நாடிமுத்து ஆகியோர், 'இங்கு படம் எடுக்கக் கூடாது' எனக் கூறி தடுத்ததால், தகராறு ஏற்பட்டது. தம்பதியரால் தாக்கப்பட்டதில், நாடிமுத்துவின் மூக்கு கண்ணாடி உடைந்தது. ராஜ்குமாருக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது.உதவி கமிஷனர் கிருஷ்ணனையும், அவர்கள் தாக்கினர். காயம் அடைந்த ராஜ்குமார், தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியார் புகார்படி, தஞ்சை மேற்கு போலீசார், தெலுங்கானா தம்பதியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
18-ஜன-202009:55:23 IST Report Abuse
Muthukrishnan,Ram புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட பகுதி என்றால் போகவேண்டியதுதானே அதை விட்டு அதிகாரிகளை அவமானப்படுத்திய இவர்களை ஜாமீனில் விடாமல் நையப்புடைத்து பாடம் கற்பித்து அனுப்பினால் போதும். அடுத்து வருபவர் சரியாக நடப்பார்கள். வயதுக்கு ஏற்ற அறிவு வேண்டாமா???
Rate this:
Share this comment
Cancel
17-ஜன-202018:15:30 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) புகைப்படம் எடுக்கக்கூடாது, புல்லில் நடக்காதீர், புகை பிடிக்காதீர், தடுப்பை தாண்டி செல்லாதீர் இதுபோன்ற பலகைகளை மதிக்கும் பழக்கம் இந்தியர்களின் இரத்தத்திலேயே இல்லை. செய்யக்கூடாது என்று சொன்னால் அதைத்தான் முதலில் செய்வது. அதுவும் நன்கு படித்தவர்கள் தான் இதுபோல் அறிவில்லாமல் செயல்படுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
17-ஜன-202015:26:19 IST Report Abuse
Ravichandran வந்த இடத்தில அவர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது நம்புபடியாக இல்லை. எண்ண நிர்வாகத்தில் இருக்கும் நீங்கள் நம்பர் ஒன்னு திருடர்கள் எதாவது நுரண்டி இருப்பீர்கள்.
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
19-ஜன-202004:50:06 IST Report Abuse
Rayகோவிலுக்கு வந்த "சர்மா" தம்பதியர் போட்டோ பார்க்கவும் அதுதான் பக்தியின் வெளிப்பாடா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X