கண்டன தீர்மானம் தள்ளுபடியாகும்: டிரம்ப் நம்பிக்கை

Added : ஜன 13, 2020
Advertisement

வாஷிங்டன் : ''அமெரிக்க மேல்சபையான செனட்டில் தனக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தள்ளுபடியாகும்'' என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் உக்ரைனில் பல்வேறு தொழில்களை செய்து வரும் ஜோ பிடன் மகன் மீது பொய் வழக்குகளை தொடருமாறு அந்நாட்டு அதிபருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதையடுத்து அமெரிக்க பார்லி.யில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீது கொண்டு கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அடுத்து மேல்சபையான செனட்டில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இங்கு குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அதனால் கண்டனத் தீர்மானம் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு முன் செனட்டில் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என ஜனநாயக கட்சி கூறுகிறது.இந்நிலையில் டிரம்ப் 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தி:என் மீதான கண்டன தீர்மானத்தை முழுமையாக தள்ளுபடி செய்வதை விட ஜனநாயக கட்சிக்கு உள்ள பொறுப்பை அங்கீகரிக்கும் வகையில் அக்கட்சி கோரியபடி சாட்சிகளின் விசாரணைக்காவது செனட் ஒப்புதல் வழங்கும் என பலரும் நம்புகின்றனர்.

அது வெறும் புரளி. அவ்வாறு நடைபெறாது. என் மீதான கண்டன தீர்மானம் தள்ளுபடியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X