பொது செய்தி

தமிழ்நாடு

நெல் அறுவடை பணிகள் தீவிரம்

Added : ஜன 13, 2020
Advertisement

பரமக்குடி, பரமக்குடி தாலுகாவிற்குஉட்பட்ட பரமக்குடி, நயினார்கோவில், போகலுார்ஒன்றியத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆண்டுகளாகபோதியமழையின்றி விவசாயம் கேள்விக்குறியானது. பரமக்குடி தாலுகாவில் குடிநீர்தட்டுப்பாடுஅதிகரித்தது.கடந்த ஆண்டு இறுதியில் வட கிழக்கு பருவ மழை விவசாயிகளுக்கு கைகொடுத்த நிலையில் வைகைஅணையில்இருந்தும்தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அனைத்து விவசாய நிலங்களுக்கும்தண்ணீர் தேவைக்குஅதிகாமாகவே கிடைத்ததுடன், கண்மாய், குளம் ஓரளவிற்கு நிறைந்தது. தொடர்ந்துபரமக்குடி, நயினார்கோவில், போகலுார் பகுதிகளில்பல்லாயிரம்ஏக்கரில் நெல்விதைப்பு செய்யப்பட்டு விளைச்சலை எட்டியது. இதையடுத்து விவசாயிகள் தங்களது அன்றாட பணிகளை கவனித்து வந்தனர். தற்போது நெல் அறுவடைக்கு வந்த நிலையில்,அறுவடை இயந்திரம் மூலம்அறுவடை பணிகள் ஜரூராக நடக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X