14 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

14 பேர் மீது வழக்கு

Added : ஜன 13, 2020

திருவாடானை: தொண்டி பாவோடி மைதானம் பஸ்ஸ்டாப்பில் டிச.29ல் தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில்குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் சாலை விதிகளை மீறி ஊர்வலமாக சென்றது, சிறுவர்களின் கைகளில் கொடிகளைகொடுத்து கோஷங்களை எழுப்ப செய்தது, அதிக வாகனங்களில் சென்றது குறித்து தொண்டி வி.ஏ.ஓ. பாஸ்கரன் புகார் அளித்தார்.இதையடுத்து தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர், முகமதுசெரிப்,கலந்தர் ஆசிக், முகமது அஷ்கர், அப்துல் ரகுமான், பந்தேநவாஸ், இஸ்மத் நானா, முகமது ஜிப்ரி, பரகத் அலி, சிராஜூதின், தமிழன் பிரசன்னா, சாதிக் பாட்ஷா, சவரி, ராஜேந்திரன் ஆகிய 14 பேரை தொண்டி போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X