ஆஸி. காட்டுத்தீ: அழியும் கோலா கரடிகள்

Added : ஜன 13, 2020
Advertisement

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ள கோலா கரடிகளை அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கும் நிலைக்கு ஆஸி. அரசு தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களான விக்டோரியா நியூ சவுத் வேல்ஸ் குயின்ஸ்லாண்ட் மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் அந்த காட்டுத்தீயால் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்புப் படையினரும் ராணுவத்தினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கோரமான பேரிடரில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் விலங்குகள் பறவைகள் என பல உயிரினங்கள் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளன. இந்த காட்டுத்தீயால் 125 கோடிக்கும் அதிகமான பறவைகளும் பல லட்சம் கோடி பூச்சிகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த காட்டுத்தீயில் குறிப்பாக கோலா கரடிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸி.யில் உள்ள கோலா கரடிகளின் மொத்த தொகையில் 30 சதவீத அளவிற்கு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் அழிந்துவரும் உயிரினமாக கோலா கரடிகளை அறிவிக்கும் நிலைக்கும் ஆஸி. அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாக்கவும் ஆஸி. அரசு சுமார் 371 கோடி ரூபாயை அவசரகால நிதியாக அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X