தமிழ்நாடு

உடல் செயல் இழந்த மகனுக்கு நிவாரணம் பெற்றுத்தர தாய் மனு

Added : ஜன 13, 2020
Advertisement

ராமநாதபுரம் நயினார்கோவில் அருகே தனியாபுளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கம்மாள் 67. இவரது கணவர் இருளய்யா இறந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இவரது மூத்த மகன் சத்தியேந்திரன் 37, சவுதி அரேபியாவில் செக்யூரிட்டியாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.ஜன.2019ல் சவுதி அரேபியாவில் காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சத்தியேந்திரன் உடல் செயல் இழந்தது. 5 மாதங்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரை அழைத்து வந்து மதுரை ராஜாஜி மருத்துவமனை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் சரியாகவில்லை.மாதந்தோறும் சந்தியேந்திரன் பணியாற்றிய நிறுவனம் அவருக்கான சம்பளத்தை வழங்கியுள்ளது. அதை, அவர் மனைவி பெற்று வந்துள்ளார். தற்போது குன்றத்துார் பகுதியில் தனது குழந்தைகளுடன் செல்வி தனியாக வசிக்கிறார். உடல் செயல்படாத மகனை அங்கம்மாள் கவனித்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:உடல் செயல்படாமல் போன என் மகனை நான் தான் தற்போது கவனித்து வருகிறேன். என் மகன் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து நிவாரணத்தொகை வழங்க இருப்பதை தெரிந்து கொண்ட எனது மருமகள், என்னுடைய ஆதார் அட்டையை பெற்றுக்கொண்டு என்னுடைய கையழுத்தை போலியாக போட்டு பணத்தை முழுவதுமாக பெற முயற்சித்து வருகிறார்.வயதான காலத்தில் எனது மகனை கவனித்து வரும் நிலையில் நிவாரணத்தொகையை பாதியாவாது எனக்கு பெற்றுத் தர வேண்டும், என்றார். பின் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X