பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலகம், கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

ராமநாதபுரம், தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.முதன்மை கல்வி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, கண்காணிப்பாளர் குமார் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி டீன் அல்லி தலைமையில் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் தலைமையாசிரியர் எஸ்தர் வேணி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் வேட்டி, சேலையில் வந்து அனைவரையும் கவர்ந்தனர். பெற்றோர், ஆசிரியர்கள் திரளாக இந்த விழாவில் கலந்து கொண்டனர்.*முதுகுளத்துார் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியில் தலைமைஆசிரியர் காதர் ஷா தலைமையில் நடைபெற்றது. ஏற்பாடுகளை சத்துணவு அமைப்பாளர் அன்னக்கிளி செய்தார். மாணவர்களுக்கு பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டது. பின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.கண்ணா மெட்ரிகுலேசன் பள்ளியில் செயலாளர் காந்திராசு தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் துரைபாண்டியன், லயன்ஸ் கிளப் தலைவர் ராமமூர்த்தி, வக்கீல் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆட்லின் லீமா வரவேற்றார். ஆசிரியர்கள் பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைபள்ளி, தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா தலைமையாசிரியர்கள் ரெனிஷா, ஆரோக்கிய மேரி தலைமையில் நடந்தது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க உறுதிமொழி எடுத்தனர். பாரம்பரியத்தை வளர்க்கும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,கிராம மக்கள் கலந்து கொண்டனர்.துாரி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் காளிமுத்து தலைமையில் ஆசிரியர்கள், குழந்தைகள் பொங்கலிட்டு கொண்டாடினர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.* கமுதக்குடி ஸ்ரீகற்பக விநாயகர் பி.எட்., கல்லுாரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கல்லுாரி தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் நவநீத கண்ணன் முன்னிலை வகித்தனர். முதல்வர் தமிழ்ச்செல்வி வரவேற்றார்.துறை மாணவர்கள் தனித்தனியே பொங்கலிட்டனர். உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி இயக்குநர்கள் மணிவண்ணன், அரிவாசுதேவன், குணசேகரன், ராமமூர்த்தி பேசினர். துணை முதல்வர்ராமமூர்த்தி நன்றி கூறினார். மேலாளர் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளைசெய்திருந்தார்.* பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் போஸ் தலைமை வகித்தார். செயலாளர் வரதராஜன், பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். முதல்வர் அல்போன்சாவரவேற்றார்.பரமக்குடி முத்தாலம்மன் ஸ்கேன் சென்டர் முன்பு சர்வதேசஉரிமைகள் கழகம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சாமுவேல் பாண்டித்துரை தலைமை வகித்தார். அருட்சகோதரி ஜோஸ்பின் அமுதா, ராஜா சிக்கந்தர், வின்சென்ட் முன்னிலை வகித்தனர். மாவட்ட, நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.*ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஐன்ஸ்டீன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சசிக்குமார், ஒருங்கிணைப்பாளர் பர்லா அப்பாஸ் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு மாணவர்களுடன், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கொண்டாடினர்.பாரம்பரிய விளையாட்டான பானை உடைத்தல் போட்டி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், பகுர்தீன், அமீர், அஜ்மீர்கான், மதிவாணன், ஆசிரியர்கள் சதக்கப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ராமேஸ்வரம் நீதிமன்றம் முன்பு வக்கீல் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். இதில் ராமேஸ்வரம் நீதிபதிகள் கமலகண்ணன், விஜயஆனந்த், வக்கீல் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் ஆரோக்கிய ரீகன், பொருளாளர் நம்பு சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ அலுவலர் மீனாகுமாரி தலைமையில் கொண்டாடினர். உதவி மருத்துவர்கள் மோகன கண்மணி, சங்கரேஸ்வரி, கண்காணிப்பாளர்கள் டேவிட், செல்வி மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X